Map Graph

இசுடெல்லா மேரிக் கல்லூரி

இசுடெல்லா மேரிக் கல்லூரி ஸ்டெல்லா மாரிஸ்)( தமிழ் நாட்டின் சென்னையில் அமைந்துள்ள பெண்களுக்கான கத்தோலிக்க உயர்கல்வி நிறுவனமாகும். இது சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ள தன்னாட்சி பெற்ற கல்லூரியாகும். இங்கு குறைந்தளவில் தங்குவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மரியாளின் பிரான்சிசுகன் மறைபரப்புச் சபையினால் நிர்வகிக்கப்படும் இந்தக் கல்லூரி ஒரு சிறுபான்மையினர் நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கிறித்தவச் சூழலில், குறிப்பாக கத்தோலிக்கச் சமூகத்தினருக்கு பல்கலைக்கழக கல்வி வழங்கும் நோக்குடன் துவங்கப்பட்டது. கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களையும் தர அங்கீகாரம் செய்வதற்காக பல்கலைக்கழக மானியக் குழுவினால் அமைக்கப்பட்ட அமைப்பான நாக் இக்கல்லூரிக்கு "ஏ" தரநிலை தந்துள்ளது.

Read article
படிமம்:Francis_Hall.jpg